வர்த்தகம், உற்பத்தி அனைத்தும் வீழ்ந்தது.... கொரோனா காலத்திலும் வளர்ச்சி கண்ட விவசாயத்துறை.!

0 10167

டந்த சில ஆண்டுகளாகவே குறைந்துவந்த இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியானது (GDP) கொரோனா பிரச்னையால் வீழ்ச்சியைச் சந்தித்து  மைனஸ்  23.9 % ஆகப் பதிவாகியுள்ளது. இதில் நம்பிக்கை தரும் விதமாக இந்தியாவில் விவசாயத் துறை மட்டும் 3.4 % வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
                                   
தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்.எஸ்.ஓ), புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 2020 - 2021 ம் ஆண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டின் ஜனவரி - மார்ச் காலாண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 3.1 சதவிகிதமாக இருந்த நிலையில் ஏப்ரல் - ஜூன் மாத காலகட்டத்தில்  - 23.9 % ஆக வீழ்ச்சியடைந்தது. 

image
நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக வணிகம், ஹோட்டல், கட்டுமானம் ஆகிய துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகத் தொழில் துறை -38.1 %, உற்பத்தித் துறை -39.3 %, கட்டுமானத் துறை -50.3 %, நிலக்கரித்துறை -23.3 %  என்று வீழ்ச்சி கண்டது.  நம்பிக்கை தரும் வகையில் விவசாயத்துறை மட்டுமே 3.4 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளது.

கடந்த ஆண்டு விவசாயத் துறையின் வளர்ச்சி 3 % ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. விவசாயத்துறை தவிர மற்ற துறைகள் அனைத்தும் கடுமையான சரிவைக் கண்டுள்ளன. இந்த பொருளாதார வீழ்ச்சியானது கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத வகையில் மோசமானது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்ட லா - நினா விளைவால் வழக்கமாக ஜூன் - ஆகஸ்ட் காலகட்டத்தில் பெய்யும் தென்மேற்குப் பருவ மழை கடந்த ஆண்டு 9.8 % அதிகமாகப் பெய்தது. இந்த மழை அளவே விவசாயத்துறை உற்பத்தி அதிகரிக்கக் காரணமாக இருந்தது. இதுவரை இல்லாதபடி இந்தியப் பொருளாதாரம் சரிந்து வீழ்ச்சியடைந்த போதிலும் விவசாயத்துறை மட்டும் வளர்ச்சி கண்டிருப்பது நம்பிக்கை தருவதாக இருப்பதாகப் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ் உருவான சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சி 3 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ள நிலையில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்து மைனஸ்  நிலையை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments