ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்கும் காட்சிகள்..!

0 2145

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பாரமுல்லாவில் இருந்து ஸ்ரீநகருக்கு ராணுவ வீரர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். ஆசாத்கஞ்ச் பகுதியில் வாகனம் வந்தபோது (Azadgunj area of Baramulla town) அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீரென கையெறி குண்டை வீசிவிட்டு ஓடிவிட்டனர். இருப்பினும் அந்த குண்டு வாகனம் மீது விழாமல் குறிதவறி சிறிது தூரத்தில் விழுந்து வெடித்தது.

குண்டுவெடித்ததில் அப்பாவி மக்கள் 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அப்பகுதி சீலிடப்பட்டு பயங்கரவாதிகளை தேடும் பணி நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments