594 கி.மீ நீளத்திற்கு கங்கா அதிவிரைவு நெடுஞ்சாலையை அமைக்கும் உ.பி.அரசு

0 1309
594 கி.மீ நீளத்திற்கு கங்கா அதிவிரைவு நெடுஞ்சாலையை அமைக்கும் உ.பி.அரசு

பிரக்யாராஜில் இருந்து மீரட் வரை 594 கிலோ மீட்டர் நீளத்திற்கு 37,350 கோடி ரூபாய் செலவில் கங்கா அதிவிரைவு நெடுஞ்சாலையை  உபி அரசு அமைக்கிறது.

நடப்பு நிதியாண்டில் துவங்கி வரும் 2023 க்குள் நிறைவடைய உள்ள இந்த திட்டத்திற்காக சர்வதேச ஒப்பந்த புள்ளிகள் கோரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது கனவுத் திட்டமான இதை கடந்த கும்பமேளாவின் போது முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். ஆறு வழியாகவும், தேவைப்பட்டால் எட்டு வழியாகவும் அமைய உள்ள இந்த அதிவிரைவு சாலை மாநிலத்தில் மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் சாலையாக இருக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments