வசந்தகுமார் உடலுக்கு உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி

0 2755
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பியும், வசந்த் அன்கோ உரிமையாளருமான வசந்தகுமார், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னையில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மறைந்த காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் உடலுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பியும், வசந்த் அன்கோ உரிமையாளருமான வசந்தகுமார், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னையில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கொரோனாவில் இருந்து அவர் மீண்டுவிட்டதாக பரிசோதனையில் தெரிய வந்த நிலையில், நிமோனியா காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு நேற்று மாலை காலமானார். சென்னை தியாகராயநகரில் உள்ள இல்லத்தில் அவர் உடல் வைக்கப்பட்டு, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

காமராஜர் நினைவிடத்திலும், பின்னர் காமராஜர் அரங்கிலும் வசந்தகுமார் உடல் வைக்கப்பட்டது. புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் சார்பிலும் மலர்வளையங்கள் வைக்கப்பட்டன.

காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு, வசந்தகுமார் உடல் கொண்டு செல்லப்பட இருந்த நிலையில், குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரான அகத்தீஸ்வரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments