செப்டம்பர் மாத ரேஷன் பொருட்கள் வாங்க டோக்கன் விநியோகம்

0 2202
ரேஷன் கடைகளில் செப்டம்பர் மாதத்துக்கான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணி நாளை தொடங்கி 4நாட்கள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் செப்டம்பர் மாதத்துக்கான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணி நாளை தொடங்கி 4நாட்கள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரேஷன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 200நபர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு பொருட்கள் தரப்படுகின்றன.

இந்நிலையில் செப்டம்பர் மாதத்துக்கான அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கான டோக்கன்கள் இன்று தொடங்கி, செப்டம்பர் 1 வரை நான்கு நாட்களுக்கு வீடுவீடாக விநியோகிக்கப்படுகிறது. மேலும் செப்டம்பர் 3ஆம் தேதி முதல் பொருட்கள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments