அமெரிக்காவில் 5 மாதங்களுக்கு பிறகு தி மெட் அருங்காட்சியகம் நாளை மீண்டும் திறப்பு

0 611
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 5 மாதங்களுக்கு பிறகு தி மெட் அருங்காட்சியகம் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், முன்னோட்ட நிகழ்வில் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 5 மாதங்களுக்கு பிறகு தி மெட் அருங்காட்சியகம் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், முன்னோட்ட நிகழ்வில் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 13 ஆம் தேதி அருங்காட்சியகம் மூடப்பட்டதில், இந்திய மதிப்பில் ஆயிரத்து 100 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தலைமை நிர்வாக அதிகாரி டான் வெயிஸ் தெரிவித்துள்ளார்.

நிதி நெருக்கடி காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளுடன் அருங்காட்சியகம் நாளை திறக்கப்பட உள்ளது.

இதன் 150 வது ஆண்டு நிறைவை மேக்கிங் தி மெட், 1870 - 2020 என்ற தலைப்பில் சிறப்பு கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments