தமிழகத்துக்குக் காவிரியில் 11,000 கன அடி நீர்வரத்து

0 813
தமிழகத்துக்குக் காவிரியில் 11,000 கன அடி நீர்வரத்து

தமிழகத்துக்குக் காவிரியில் நீர்வரத்து 11 ஆயிரம் கன அடியாகவும், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நாலாயிரத்து 665 கன அடியாகவும் உள்ளது.

காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிக்குண்டுலுக்கு நேற்று ஏழாயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலையில் 11 ஆயிரம் கன அடியாக  அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நேற்று ஆறாயிரத்து 204 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நாலாயிரத்து 665 கன அடியாகக் குறைந்தது.

அணையின் நீர்மட்டம் 94 புள்ளி 9 அடியாகவும், நீர் இருப்பு 58 புள்ளி 4 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.அணையிலிருந்து பாசனத்துக்காகக் காவிரி ஆற்றில் 18 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய்களில் 600 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments