எதிர்காலப் போர்களுக்குத் தேவையான ஆயுதங்கள் குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழு

0 1128

எதிர்காலப் போர்கள் மற்றும் பயன்படுத்தக்கூடிய ஆயுதங்கள் குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ அமைத்துள்ளது.

வெளிநாட்டு ஆயுத இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் பிரதமரின் ஆத்ம நிர்பர் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி ஐஐடி இயக்குநர் ராமகோபால ராவ் தலைமையில் இயங்கும் 5 பேர் கொண்ட குழுவுக்கு, டிஆர்டிஒ தலைவர் சதீஷ் ரெட்டி அனுப்பியுள்ள கடிதத்தில், தற்போதைய சூழலில் பாதுகாப்பு அம்சங்களை மறு ஆய்வு செய்தல், போர்களத் தேவைகளை அறிந்து அதற்கேற்ப செயல்படுதல் குறித்து ஆய்வு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்காலப் போர்கள் மற்றும் பயன்படுத்தக்கூடிய ஆயுதங்கள் குறித்து ஆய்வு செய்து 45 நாட்களுக்குள் அறிக்கை தருமாறும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments