"முகக்கவசம் கட்டாயம் கிடையாது" சர்ச்சையை உருவாக்கிய பெங்களூரு மாநகராட்சி அறிவிப்பு

0 7514
பெங்களூருவில் வாக்கிங் செல்வோர் மற்றும் இரு சக்கர வாகனங்களில் தனியே செல்வோர் உள்ளிட்டோருக்கு முகக் கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளித்து மாநகராட்சி வெளி யிட்ட அறிவிப்பு, சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

பெங்களூருவில் வாக்கிங் செல்வோர் மற்றும் இரு சக்கர வாகனங்களில் தனியே செல்வோர் உள்ளிட்டோருக்கு முகக் கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளித்து மாநகராட்சி வெளி யிட்ட அறிவிப்பு, சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ள சூழலில், பெங்களூரு மாநகராட்சியின் ஆணையர் மஞ்சுநாத் பிரசாத், சில சலுகைகளை வெளியிட்டு இருந்தார்.

இதன்படி, காரை ஒருவர் மட்டுமே ஓட்டிக் கொண்டு செல் லும் போது, முகக் கவசம் அணிய தேவை இல்லை. இதேபோல, ஒரு வர் மட்டுமே மோட்டார் சைக்கிளில் செல்லும் போதும் முகக் கவசம் அணிவது கட்டாயம் கிடையாது.

அதேநேரம், கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் ஒன்றுக்கு மேற்பட்டோர் பயணம் செய்தால் மட்டுமே, முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். இதுதவிர, ரன்னிங், ஜாக்கிங், வாக்கிங் செல்வோரும் முகக் கவசம் அணிய வேண்டாம் என்றும் மஞ்சுநாத் பிரசாத் அறிவித்திருந்தார்.

இதற்கு சுகாதார நிபுணர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்ததால், தமது டுவிட்டர் மூலம் விளக்கம் அளித்துள்ள மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத் பிரசாத், மறு உத்தரவு வரும் வரை, அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments