கோவிஷீல்டு தடுப்பூசியை தமிழ்நாட்டில் பரிசோதிக்க முதலமைச்சர் உத்தரவு

0 7178
கோவிஷீல்டு தடுப்பூசியை தமிழ்நாட்டில் பரிசோதிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதித்து உத்தரவு

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி, வெகு விரை வில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர் பாக விளக்கம் அளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கோவிஷீல்டு தடுப்பூசியை தமிழ்நாட்டில் பரிசோதிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதித்து உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும், போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையிலும் சுமார் 300 நபர்களிடம் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த கோவிஷீல்டு தடுப்பூசி டி-செல்கள் எனப்படும் வெள்ளை அணுக்களை 14 நாட்களில் மனித உடலில் உருவாக்கும் ஆற்றல் படைத்தது என்றும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட செல்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்து, 28 நாட்களுக்குள் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்கி விடும் என்றும் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments