உழவர் உதவித்தொகை முறைகேடு : வேளாண் அதிகாரிகள் பணியிடை நீக்கம்

0 4775
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மத்திய அரசின் உழவர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் போலியான பயனாளிகளை சேர்த்து நிதி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக வேளாண் உதவி இயக்குநர்கள் இருவர் பணியிடை நீக்கமும், தற்காலிகப் பணியாளர்கள் 13 பேர் பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மத்திய அரசின் உழவர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் போலியான பயனாளிகளை சேர்த்து நிதி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக வேளாண் உதவி இயக்குநர்கள் இருவர் பணியிடை நீக்கமும், தற்காலிகப் பணியாளர்கள் 13 பேர் பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

சிறு குறு விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச வருவாய் உத்தரவாதம் அளிக்கும் வகையில் அவர்களின் வங்கிக் கணக்கில் மூன்று தவணைகளாக ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் உதவித்தொகை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

விவசாயிகளிடம் நிலப்பட்டா, ஆதார் எண், வங்கிக் கணக்கு விவரங்களை வேளாண் துறை அதிகாரிகள் பெற்றுப் பயனாளிகளைத் தேர்வு செய்து வந்தனர்.

இந்தத் திட்டத்தில் பயன்பெற இணைய வழியில் பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து இடைத்தரகர்கள் சிலர் வேளாண் துறை அலுவலர்களின் உதவியுடன் விவசாயிகள் அல்லாதோர், பெரும் விவசாயிகள், ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டோர் எனப் பலரை இத்திட்டத்தில் பயனாளிகளாகச் சேர்த்து முறைகேடுகளைச் செய்தது தெரியவந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 76 ஆயிரத்து 756 பயனாளிகள் சேர்க்கப்பட்ட நிலையில் பெரும்பாலானோர் போலியாகச் சேர்க்கப்பட்டவர்கள் எனத் தெரியவந்தது. இது குறித்துக் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் விசாரணை நடத்த ஆட்சியர் கிரண்குராலா உத்தரவிட்டார்.

வருவாய் ஆய்வாளர்கள், வேளாண்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், பல தனியார் கணினி மையங்களில் இருந்து போலிப் பயனாளிகள் சேர்க்கப்பட்டதும், வேளாண் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பாஸ்வேர்டுகளை இவர்கள் பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்தது.

ரிசிவந்தியம் வேளாண் உதவி இயக்குநர் ராஜசேகரன், தியாகதுருகம் வேளாண் உதவி இயக்குநர் அமுதா ஆகியோர் பாஸ்வேர்டை வெளியாட்களிடம் பகிர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வேலாயுதம் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்துள்ளார். வேளாண்மைத் துறையில் தற்காலிகமாகப் பணியாற்றிய உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் 7 பேர், பயிர் அறுவடை பரிசோதனையாளர்கள் 4பேர், கணினி தரவு உள்ளீட்டாளர்கள் 2 பேர் உள்ளிட்ட 13 பேரைப் பணி நீக்கம் செய்துள்ளார். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் உழவர் உதவித் தொகைத் திட்டத்தில் முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டார். இது தொடர்பாக வேளாண்மை இணை இயக்குநர் ராஜசேகர் விசாரித்ததில், செஞ்சியை அடுத்த வல்லத்தில் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து வல்லத்தில் பொறுப்பு வேளாண் உதவி இயக்குநராக உள்ள ரவிச்சந்திரனைப் பணியிடை நீக்கம் செய்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments