கோவையில் ஒன்றரை வயது குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய நிலக்கடலை குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டு

0 93655
கோவையில் ஒன்றரை வயது குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய நிலக்கடலை குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டு

கோவை அரசு மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய நிலக்கடலையை அகற்றி குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டு குவிகிறது.

கடந்த 18-ம் தேதி திருப்பூர் மாவட்டம் ஆலங்காடு பகுதியை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை மலர்விழி நிலக்கடலை சாப்பிடும் போது புரை ஏறி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர், திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் உடல்நிலை சற்று மோசமாக இருந்ததால் மேல்சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குழந்தைக்கு எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் பரிசோதனைகள் செய்து பார்த்ததில், மூச்சுக்குழாயில் அடைப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, உடனடியாக குழந்தைக்கு மயக்க மருந்து செலுத்தி உள்நோக்கு கருவி மூலம் மூச்சுக்குழாயில் இருந்த நிலக்கடலையை தொண்டை துறைத்தலைவர் அலி சுல்தான் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அகற்றினர்.

குழந்தைகளுக்கு மூச்சுக்குழாயின் விட்டம் 5 மி.மீ. அளவில்தான் இருக்கும் எனக்கூறும் மருத்துவர்கள், உணவு பொருட்களையோ, சிறு கற்களையோ குழந்தைகள் வாயில் போட்டுக்கொள்ளாமல் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments