நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் மவுனம் ஏன்? - மு.க.ஸ்டாலின்

0 754

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் மவுனம் ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் அமைச்சரவைத் தீர்மானத்திற்கு இதுவரை அவசரச் சட்டம் பிறப்பிக்காதது ஏன்? என வினவியுள்ளார்.

மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை எந்த அடிப்படையில் நடக்கப் போகிறது என்பதில் நிலவும் குழப்பம் காரணமாக, இலட்சக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் குழப்பத்திலும் கொந்தளிப்பிலும் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த ஜூலை மாதம் தமிழக அமைச்சரவை கூடி நிறைவேற்றிய தீர்மானத்தின் நிலை என்ன என்பது இதுவரை புதிராகவே இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

"இது குறித்து அவசரச் சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்று முதலமைச்சர் நேற்று திடீரென அறிவித்துள்ளதாகவும், ஒரு மாதத்திற்கும் மேலாக அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது மேல் நடவடிக்கை எடுக்காமல் விட்டது ஏன்? என்றும் அவர் கேட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments