மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 3 அடி குறைந்துள்ளது

0 706

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், அணையின் நீர்மட்டம் 3 நாட்களில் 3 அடி குறைந்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து, நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணை கடந்த வாரம் 99 அடியை எட்டியது. அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது.

இன்று காலை நிலவரப்படி, நீர் வரத்து வினாடிக்கு 6,957 கன அடியாக இருந்தது. அதேசமயம், காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 18,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதுதவிர சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட விவசாயிகள் பயன் அடையும் வகையில், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி திறக்கப்படுகிறது. நீர்வரத்தைவிட நீர்திறப்பு மும்மடங்கு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென குறைகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.80 அடியாகவும், நீர்இருப்பு 60.72 டிஎம்சி ஆகவும் இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments