காங்கிரஸில் "ஆல் இஸ் வெல்" என சொல்ல மாட்டேன் - ப.சிதம்பரம்

0 1750

கடல் என்றால் அலை இருக்கும், கட்சி என்றால் பிரச்னை இருக்கும் என உட்கட்சி விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கும் புதிய தலைவரை நியமிக்கக் கோரி மூத்த தலைவர்கள், சோனியா காந்திக்கு கடிதம் எழுதியது கட்சிக்குள் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதுதொடர்பாக பேசியுள்ள சிதம்பரம், காரிய கமிட்டிக் கூட்டத்திற்கு பிறகு கட்சிக்குள் எல்லாம் சரியாகிவிட்டது என்று சொல்ல முடியாது எனவும், எப்போதும் சில கருத்து வேறுபாடு கட்சிக்குள் இருக்கவே செய்யும், அதன் மூலமே மாற்றம் வரும் எனவும் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments