"கரீப் கல்யாண் ரோஜ்கார் அபியான்" திட்டத்தின் கீழ், ரயில்வேத் துறையில் 6.4 லட்சம் பணிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்

0 922

கரீப் கல்யாண் ரோஜகார் அபியான் திட்டத்தின் கீழ், ரயில்வேத் துறையில் 6 லட்சத்திற்கும் அதிகமான பணிகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கை தொடர்ந்து சொந்த ஊர்களுக்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் கடந்த ஜூன் மாதம் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

அதன்படி, பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெறும், 165 ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களில் 6 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த பணிகளில் 12,276 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், இதற்காக இதுவரை சுமார் ஆயிரத்து 400 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு உள்ளதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments