இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி "ஃபாலோ-ஆன்"

0 2226

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 273 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன பாகிஸ்தான் அணி, பாலோ ஆன் பெற்றுள்ளது. 3 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பாகிஸ்தான் அணி 3வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாத அந்த அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்.

முகமது ரிஷ்வான் 53 ரன்களை சேர்க்க, நிலைத்து நின்று ஆடிய அசார் அலி 141 ரன்களை குவித்து டெஸ்ட் போட்டிகளில் தனது 3வது சதத்தை நிறைவு செய்தார்.

அடுத்துவந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற, முதல் இன்னிங்சில் அந்த அணி 273 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஆண்டர்சன் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதையடுத்து, 310 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி ஃபாலோ-ஆன் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து, 3ம் நாள் ஆட்டம் நிறைவடைந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments