பக்கவாட்டில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கண்டெய்னர் லாரி - பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

0 3992
புதுச்சேரியில் கண்டெய்னர் லாரி ஒன்று பக்கவாட்டில் வந்த இருசக்கர வாகனத்தை கவனிக்காமல் இடதுபுறம் திரும்பியபோது அதன் சக்கரத்தில் சிக்கி இருசக்கர வாகன ஓட்டி பலியான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

புதுச்சேரியில் கண்டெய்னர் லாரி ஒன்று பக்கவாட்டில் வந்த இருசக்கர வாகனத்தை கவனிக்காமல் இடதுபுறம் திரும்பியபோது அதன் சக்கரத்தில் சிக்கி இருசக்கர வாகன ஓட்டி பலியான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நெட்டப்பாக்கத்தைச் சேர்ந்த சக்திவேல் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வில்லியனூர் நோக்கிச் சென்றுள்ளார்.

எம்.ஆர்.எஃப் நிறுவனம் அருகே வந்தபோது முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென நிறுவனத்துக்குள் செல்வதற்காக திரும்பியுள்ளது.

லாரியின் பக்கவாட்டில் வந்துகொண்டிருந்த சக்திவேல் அதனை எதிர்பாராத நிலையில், லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார்.

லாரி ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், சக்திவேலின் மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவ இடத்துக்கு வந்த சக்திவேலின் உறவினர்கள் இழப்பீடு கேட்டு எம்.ஆர்.எஃப் நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.

ஆனால் விபத்துக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை எனவும் லாரி உரிமையாளரிடம் கேட்குமாறும் அவர்கள் கூறவே, சுமார் 7 மணி நேரம் சக்திவேலின் உடல் சம்பவ இடத்திலேயே கிடந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments