ரபேல் விமானங்களை லடாக் எல்லையில் நிறுத்த இந்தியா திட்டம்?

0 4435
ரபேல் விமானங்களை லடாக் எல்லையில் நிறுத்த இந்தியா திட்டம்?

இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்ட லடாக் எல்லையில் ரபேல் விமானங்களை நிறுத்துவது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படைத் தலைவர் பிபின் ராவத், முப்படைத் தளபதிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

கடந்த மாதம் 6-ந் தேதி முதல் அங்கு படை விலக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இதில் கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து மட்டுமே சீனா தனது படைகளை திரும்ப பெற்றது.

ஆனால் பங்கோங்சோ, தேப்சாங் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் சீன படைகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இது இந்தியாவுக்கு அதிருப்தியை கொடுத்து உள்ளது.

எனவே அங்கு படை விலக்கும் நடவடிக்கைகளை விரைவில் முடித்து, கடந்த ஏப்ரல் மாதம் வரை நிலவிய சூழலை எல்லை முழுவதும் திரும்ப கொண்டு வர வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் லடாக் எல்லை நிலவரம் குறித்து ராஜ்நாத் சிங் நேற்று ஆய்வு செய்தார். இந்த கூட்டத்தில் ரபேல் விமானங்களை லடாக் எல்லையில் நிறுத்துவது குறித்து திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments