மாநகராட்சி விதிகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டதாக தூத்துக்குடி சென்னை சில்க்ஸ் நிறுவனம் மூடி சீல் வைப்பு

0 2991
மாநகராட்சி விதிகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டதாகக் கூறி தூத்துக்குடியிலுள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனம் மூடி சீல் வைக்கப்பட்டது.

மாநகராட்சி விதிகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டதாகக் கூறி தூத்துக்குடியிலுள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனம் மூடி சீல் வைக்கப்பட்டது.

அங்குள்ள வி.இ சாலையில் 5 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் இயங்கி வரும் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் ஜவுளி விற்பனை, நகை விற்பனை, சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பிரிவுகள் இயங்கி வருகின்றன.

இதில் சூப்பர் மார்க்கெட் இயங்கும் கட்டிடத்துக்கான அனுமதியை மாநகராட்சியிடம் இருந்து பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும் பதிலளிக்காததால் கட்டிடம் மூடி சீல் வைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments