வருவாய் இழப்பு இருந்தாலும் மக்களுக்கான திட்டங்கள் பாதிக்கப்படாது - முதலமைச்சர்

0 1515
கொரோனாவால் அரசுக்கு வருவாய் இழப்பு இருந்தாலும் மக்களுக்கான திட்டங்கள் குறைவின்றி நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

கொரோனாவால் அரசுக்கு வருவாய் இழப்பு இருந்தாலும் மக்களுக்கான திட்டங்கள் குறைவின்றி நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக வேலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர், வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசிடம் இருந்து நிதி கிடைத்ததும், 600 கோடி ரூபாய் செலவில் ராணிப் பேட்டை குரோமியம் தொழிற்சாலையில் இருந்து குரோமிய கழிவுகளை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 6 ஆயிரத்து 990 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 117 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். முடிவடைந்த பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர், 11 துறைகளின் சார்பில், சுமார் 14 ஆயிரம் பயனாளிகளுக்கு 86 கோடி ரூபாய் மதிப்பில்லான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

முடிவில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இதுதவிர, மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டத்திலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments