விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் - தமிழக அரசு

0 1451
விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் - தமிழக அரசு

பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி திருவிழாவை கொண்டாடிக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு, மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

வரும் 22 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மத்திய அரசின் வழிகாட்டல்படியும், கொரோனா சூழலை கருத்தில் கொண்டும், தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கிலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதையும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதையும், பொதுமக்களின் நலன் கருதி தடை செய்து  அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  தாக்கலான அனைத்து மனுக்களிலும், அரசின் ஆணையை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளதையும் தமிழக அரசு எடுத்துக் காட்டியுள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாடுகள் ஆகியன நாட்டின் அனைத்து பகுதிகளும் தடை செய்யப்பட்டுள்ளதை தமிழக அரசு சுட்டிக் காட்டி உள்ளது.

எனவே, மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் அவரவர் வீடுகளில் இருந்தவாறே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுமாறு 1தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments