இந்தோனேஷியாவில் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வித்தியாச முயற்சி

0 600
இந்தோனேஷியாவில் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, போக்குவரத்து சிக்னலில் சவப்பெட்டியை வைத்துள்ளனர்.

இந்தோனேஷியாவில் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, போக்குவரத்து சிக்னலில் சவப்பெட்டியை வைத்துள்ளனர்.

இந்தோனேஷியாவில் கொரோனா தொற்றால் 6000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தலைநகர் ஜகார்த்தாவில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சவப்பெட்டி விளம்பரம் மக்களைப் பயமுறுத்துவதற்காக அல்ல என்றும் கொரோனா ஆபத்தான நோய் என்பதைக் காட்டவே சவப்பெட்டி வைக்கப்பட்டுள்ளதாக ஜகார்த்தா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிக்னலில் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டியின் மீது கொரோனாவால் உயிரிழந்தவரின் சவப்பெட்டி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments