வணிக வளாகத்தின் கார் பார்க்கிங்கில் திடீரென ஏற்பட்ட பள்ளம்

0 1063
சீனாவில் வணிக வளாகத்தின் கார் பார்க்கிங்கில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கி 21 கார்கள் சேதமடைந்தன.

சீனாவில் வணிக வளாகத்தின் கார் பார்க்கிங்கில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கி 21 கார்கள் சேதமடைந்தன.

சிச்சுவான் மாகணதில் உள்ள அந்த வணிக வளாகத்தில் மாலை நேரத்தில் வாடிக்கையாளர்கள் காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளனர்.

இந்நிலையில், எதிர்பாராத விதமாக பார்க்கிங் தளம் முழுவதும் சரிந்து பெரும் பள்ளம் ஏற்பட, பெரும் புகை மூட்டத்துடன் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் அந்த பள்ளத்திற்குள் சரிந்து விழுந்துள்ளன.

கனமழை காரணமாக வணிக வளாகம் அருகே பாயும் யாங்சே நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், ஏற்பட்ட இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் இல்லை என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments