லே பகுதியில் உருவாகிறது, புதிய பாதை : இந்தியா திடீர் நடவடிக்கை

0 4116
எதிரிகளின் கண்ணில் படாமல், துருப்புகளை அதி விரைவாக நகர்த்தி செல்வதற்கு வசதியாக லே - பகுதியில் இந்தியா, புதிய சாலை அமைக்கும் பணியை துவக்கி உள்ளது.

எதிரிகளின் கண்ணில் படாமல், துருப்புகளை அதி விரைவாக நகர்த்தி செல்வதற்கு வசதியாக லே - பகுதியில் இந்தியா, புதிய சாலை அமைக்கும் பணியை துவக்கி உள்ளது.

அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் அத்துமீறினால் அதனை முறியடிக்க, இந்தியா அதிரடி வியூகம் வகுத்துள்ளது. இதன்படி, மணாலி அருகே உள்ள ZOJILA என்ற இடத்தில் இருந்து லே பகுதி வரை செல்லும் இந்த பாதை, டிராஸ் மலைப்பகுதியையும், கார்கில் பகுதியையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

ஏற்கனவே, இரு பாதைகள் இருந்தபோதிலும், 3- வதாக உருவாக்கப்படும் இந்த புதிய பாதை மூலம், அதி நவீன பீரங்கிகள், ராணுவ வாகனங்கள் மற்றும் துருப்புகளை எதிரிகளின் கண்ணுக்கு தெரியாத அளவில், மிகவும் விரைவாக கொண்டு செல்ல முடியும்.

இந்த புதிய பாதை முடிவடையும் போது, சுமார் 3 மணி முதல் 4 மணி நேரம் மிச்சமாகும் என ராணுவ வட்டாரங்கள் நம்பிக்கை தெரி வித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments