ஆன்லைன் மருந்து விற்பனை நிலையமான நெட்மெட்சை வாங்கியது ரிலையன்ஸ்

0 880

ஆன்லைன் மருந்து விற்பனை நிலையமான நெட்மெட்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை 620 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது.

இதன் மூலம் அந்நிறுவனத்தின் 60 விழுக்காடு பங்குகள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வசம் சென்றுள்ளன. மேலும் நெட்மெட்சின் துணை நிறுவனங்களான திரிசாரா ஹெல்த், நெட்மெட்ஸ் மார்க்கெட் பிளேஸ், தாதா பார்மா டிஸ்ட்ரிபுசன் ஆகியவை ரிலையன்சின் நேரடிக் கட்டுப்பாட்டில் வருகின்றன.

குறைந்த விலையில் மருத்துவ சேவை வழங்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முயற்சிக்கு இது மேலும் வலுச்சேர்க்கும் என ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வெஞ்சர்ஸ் இயக்குநர் இசா அம்பானி தெரிவித்துள்ளார்.

அமேசான் நிறுவனம் இ பார்மசி என்னும் பெயரில் இணையவழி மருந்து வணிகத்தைத் தொடங்கியுள்ள நிலையில், ரிலையன்ஸ் நெட்மெட்சைக் கையகப்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments