சேலம் மாவட்டத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

0 4780
சேலம் மாவட்டத்தில் வெகுவாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாகக் கூறும் மருத்துவ நிபுணர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே பெருந்தொற்றை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் எடுத்த தீவிர நடவடிக்கைகளால் ஜூலை மாத இறுதியில் சற்று கட்டுக்குள் வந்திருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த மாதம் வரை மருத்துவமனைகளுக்கு வருவோரின் தினசரி எண்ணிக்கை 50 முதல் 70 என்றிருந்த நிலையில், சமீப நாட்களாக இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து 150 முதல் 200 பேர் தினசரி பாதிப்புக்குள்ளாகின்றனர் என்று கூறப்படுகிறது.

ஊரடங்கு தளர்வு காரணமாக வெளிமாவட்டங்களில் இருந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் எண்ணிக்கை கூடும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments