இங்கிலாந்து- பாகிஸ்தான் இடையிலான 2வது டெஸ்ட் டிராவில் முடிந்தது

0 990

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது  கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

3 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி கடந்த 13ம் தேதி தொடங்கியது. போட்டியின் முதல் நாள் முதலே அடிக்கடி மழை குறுக்கீடு மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. 3வது நாள் ஆட்டம் மழையால் முழுமையாக கைவிடப்பட்ட நிலையில், 4வது நாளில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதைதொடர்ந்து ஒரு விக்கெட் இழப்பிற்கு 7 ரன்களுடன் இங்கிலாந்து அணி ஐந்தாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. ஜாக் கிராவ்லியின் அரைசதத்துடன் அந்த அணி 110 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்டது. இதையடுத்து, 1க்கு பூஜ்ஜியம் என இங்கிலாந்து அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments