நதி நீர் இணைப்பு : மத்திய அமைச்சருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை

0 2274
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நதி நீர் இணைப்பு தொடர்பாக மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நதி நீர் இணைப்பு தொடர்பாக மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.

சென்னை - தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனையில், நடந்தாய் வாழி காவேரி, காவேரி - கோதாவரி இணைப்பு திட்டம், குண்டாறு இணைப்பு திட்டம், கருமேனி நதிநீர் இணைப்பு திட்டம் மற்றும் காவிரி ஆற்றை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர, தமிழகத்தின் நீர் மேலாண்மை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் மத்திய நீர் வளத்துறை அமைச்சருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவார் என தலைமைச்செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments