ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு..!

0 1652

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி, வேதாந்த குழுமத்தின் சார்பில் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது.

மக்கள் போராட்டத்தை தொடர்ந்து கடந்த 2018 மே மாதம் 28 -ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது.இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி18 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க இயலாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை அடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஆலையை திறக்க கோரி ஸ்டெர்லைட் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 39 நாட்களாக நடந்த விசாரணையின் முடிவில் கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் தேதி தீர்ப்பினை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments