ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு

0 2062
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு 43 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை அண்மையில் தொட்ட நிலையில், மீண்டும் படிப்படியாக சரிந்து வருகிறது.

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு 43 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை அண்மையில் தொட்ட நிலையில், மீண்டும் படிப்படியாக சரிந்து வருகிறது.

கிராம் தங்கம் விலை நேற்று 5 ஆயிரத்து 100 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 40 ஆயிரத்து 800 ரூபாயாகவும் இருந்தது. இந்நிலையில் இன்று கிராம் தங்கம் விலை 25 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 75 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 200 ரூபாய் சரிந்து 40 ஆயிரத்து 600 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் இன்று சிறிது குறைந்துள்ளது. பார் வெள்ளி விலை கிலோவுக்கு 75 ஆயிரத்து 100 ரூபாயாக நேற்று இருந்த நிலையில், இன்று 400 ரூபாய் குறைந்து 74 ஆயிரத்து 700 ரூபாயாக விற்பனையாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments