தானியங்கி முறையில் இபாஸ் வழங்க ஆன்லைனிலும் மாற்றங்கள் - சென்னை மாநகராட்சி

0 7147
தமிழகத்தில் மாவட்டங்களிடையே பயணிக்க விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கேற்ப தானியங்கி முறையில் இபாஸ் வழங்கும் வகையில் ஆன்லைனிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மாவட்டங்களிடையே பயணிக்க விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கேற்ப தானியங்கி முறையில் இபாஸ் வழங்கும் வகையில் ஆன்லைனிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க, பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. அதன்படி மாவட்டங்களிடையே பயணிக்க நேற்று வரை இ-பாஸ் கட்டாயமாக இருந்தது. குடும்பத்தினர், நெருங்கிய உறவினர் இறப்புக்கு செல்வதற்காகவும், திருமணம், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய காரணங்களுக்காகவும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் வழங்கப்பட்டு வந்தது.

பல மாவட்டங்களில் இ-பாஸ் வழங்குவதில் அரசு அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதோடு, இ-பாஸ் வாங்குவதில் பெரும் சிரமம் இருப்பதாக பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மாவட்டங்களிடையே பயணிக்க, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கும் முறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ஆதார், குடும்ப அட்டை, செல்பேசி எண் விவரங்களுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தாமதமின்றி உடனடியாக இ பாஸ் வழங்கப்படுகிறது.

ஆட்டோ-ஜெனரேட் எனப்படும் தானியங்கி முறையில் உடனடியாக இ-பாஸை பதிவிறக்கிக் கொள்வதற்கேற்ப ஆன்லைனில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், பொதுமக்கள் தேவையற்ற காரணங்களுக்காக விண்ணப்பிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்கு வருவோருக்கு ஏற்கெனவே உள்ள இ-பாஸ் நடைமுறை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments