தொழில், வேலைவாய்ப்புகளுக்கு மதுரையை 2வது தலைநகராக்குவது காலத்தின் கட்டாயம் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

0 908
மதுரையை இரண்டாவது தலைநகராக ஆக்க வேண்டும் என்ற தென் மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த விருப்பம் நிறைவேறும் காலம் தற்போது கனிந்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையை இரண்டாவது தலைநகராக ஆக்க வேண்டும் என்ற தென் மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த விருப்பம் நிறைவேறும் காலம் தற்போது கனிந்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொழில் நகரமாக மாற்றவும், தென் மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காகவும் மதுரையை இரண்டாம் தலைநகராக உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தொழில் முதலீட்டாளர்களை மதுரைக்கு கொண்டு வரவும், எண்ணற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்த நடவடிக்கை அவசியம் என ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

பல வெளிநாடுகளில் இரண்டு தலைநகரங்கள் உள்ளன என்றும், ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைய உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments