நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 941 பேர் கொரோனாவுக்கு பலி

0 893
நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை இருபத்தி ஆறரை லட்சத்தை நெருங்கியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 57 ஆயிரத்து 982 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை இருபத்தி ஆறரை லட்சத்தை நெருங்கியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 57 ஆயிரத்து 982 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 941 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 லட்சத்து 47 ஆயிரத்து 664ஆகவும், கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்து 921ஆகவும் அதிகரித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 6 லட்சத்து 76 ஆயிரத்து 900 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 19 லட்சத்து 19 ஆயிரத்து 843 பேர் குணமாகியுள்ளனர்.

நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 7 லட்சத்து 31 ஆயிரத்து 697 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதையடுத்து, இதுவரை பரிசோதனை நடத்தப்பட்டோர் எண்ணிக்கை 3 கோடியே 41 ஆயிரத்தை கடந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments