இந்திய கிரிக்கெட்டில் தோனியின் ஈடு இணையற்ற பங்களிப்புக்காக தாமும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் -அமித் ஷா

0 1827

சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற தோனிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிசிசிஐ தலைவர் கங்குலி, இந்திய அணி கேப்டன் கோலி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் புகழாரம் சூட்டி உள்ளனர்.

இந்திய கிரிக்கெட்டில் தோனியின் ஈடு இணையற்ற பங்களிப்புக்காக, உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான அவரது கிரிக்கெட் ரசிகர்களோடு சேர்ந்து தாமும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் தோனியின் பேட்டிங் உலக கிரிக்கெட் ரசிகர்களை எழுந்து நிற்கச் செய்துவிடும் என்றும், தோனியின் ஓய்வு அறிவிப்பு ஒரு சகாப்தத்தின் முடிவு என்றும் கங்குலி தெரிவித்துள்ளார்.

சக வீரராக தோனி கொடுத்த மரியாதை, அரவணைப்பு தன்னுள் நீங்காமல் இருக்கும் என்றும், அவருக்கு தலை வணங்குகிறேன் என்றும் கோலி கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட்டில் தோனியின் பங்களிப்பு மகத்தானது என்று சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments