தமிழ்நாடு முழுவதும் இன்று முழு ஊரடங்கு

0 2363
தமிழ்நாடு முழுவதும் இன்று ஒருநாள், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

தமிழகம்  முழுவதும் இன்று தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பால் விற்பனை நிலையங்கள், மருந்துக் கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து வித கடைகளும், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூலை மாதத்தை போலவே ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து ஞாயிறுகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று ஆகஸ்ட் மாதத்தின் 3வது ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி மாநிலம் தழுவிய தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

காய்கறி, மளிகை உட்பட அனைத்து கடைகளும், பெட்ரோல் பங்குகளும், அனைத்து வித வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. பால் விற்பனை நிலையங்கள், மருந்துக்கடைகள் மட்டும் செயல்படுகின்றன.

சாலைகளும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு செல்வோரையும் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் சோதனைக்கு பின்னரே அனுமதித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments