நடிகர் ரஜினிகாந்தை வம்புக்கிழுத்த மீரா மிதுனுக்கு ரசிகர்கள் பதிலடி

0 74452

பல நடிகர் நடிகைளிடத்தில் பிக்பாஸ் நடிகை மீரா மிதுன் வம்பிழுத்து வருகிறார். நடிகர் விஜய், சூர்யா ஆகியோர் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்த மீரா மிதுனை இயக்குனர் பாரதிராஜா கண்டித்திருந்தார். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் குறித்து மீரா மிதுன் வெளியிட்ட ட்விட்டர் பதிவு அவரின் ரசிகர்களை கோபத்துக்குள்ளாக்கியுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் நடித்து தமிழிலில் வெளியான முதல்  படமான அபூர்வ ராகங்கள் 1975 - ம் ஆண்டு ஆகஸ்ட் 15- ந் தேதி ரிலீஸ் ஆனது.  இதையடுத்து தமிழ் சினிமாவில் ரஜினியின் 45 ஆண்டுகள் என்ற தலைப்பில் சமூகவலைத் தளங்களில் ரசிகர்கள், நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

நடிகர் மோகன்லால், இயக்குநர்கள் பா.ரஞ்சித், கார்த்தி சுப்புராஜ்  உள்ளிட்ட பலரும் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்தும் ட்விட்டரில் ,' நீங்கள் இல்லாமல் நான் இல்லை ' என்று ரசிகர்களின் வாழ்த்தை ஏற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் , ஆட்டை கடித்து மாட்டை கடித்த கதையாக நடிகை மீரா மிதுன் இப்போது ரஜினி காந்தை வம்பிழுத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் ரஜினியின் 45 ஆண்டுகள் குறித்து ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ள மீரா மிதுன்,'' சூப்பர்ஸ்டாரின் 45 வருடங்கள் சந்தேகமில்லை. ஒரு பஸ் கண்டக்டராக இருந்து வெற்றிக்கரமான நடிகராக வந்தது கிரேட் என நான் சொல்வேன். ஆனால், அவரின் அரசியல் லட்சியம்  தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற கனவு கனவாகவே போய் விடும். கடந்த 54 ஆண்டுகளாக தி.மு.க-வும் அ.தி.மு.கவும் தமிழ்நாட்டில் பாதையை சரியாக வகுத்துள்ளனர். எனவே, அரசியலை விட்டு விலகிச் செல்லுங்கள் '' என்று கூறியிருந்தார்

மீரா மிதுனின்  பதிவுக்கு ஒருவர் செய்த கமாண்டில் , ''தேர்தலுக்கு 8 மாதங்கள்தான் உள்ளது. ரஜினியின் கொள்கைகள் என்னவென்று தெரியவில்லை. ஆந்திராவில் என்.டி.ஆர் முதல்வர் ஆனது போல தமிழ்நாட்டில் ரஜினி ஆகி விட முடியாது'' என்று கூறியிருந்தார். அந்த கமாண்டில் மீரா மிதுன் , 'நானும் இதேயே சொல்ல வந்தேன்' என்று பதிலளித்துள்ளார். 

மீரா மிதுனின் ரஜினிகாந்த் குறித்த பதிவால் ரஜினிகாந்த் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். இப்போது விஜய், சூர்யா ரசிகர்களுடன் சேர்ந்து ரஜினி ரசிகர்களும் மீராமிதுனுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments