அமராவதியில் கைவிடப்பட்ட வளர்ச்சிப் பணிகளை மீண்டும் தொடங்க திட்டம்

0 2475
ஆந்திர மாநிலம் அமராவதியில் கைவிடப்பட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை மீண்டும் தொடங்க முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திர மாநிலம் அமராவதியில் கைவிடப்பட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை மீண்டும் தொடங்க முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அம்மாநிலத்தில் 3 தலைநகரங்கள் உருவாக்கும் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் முடிவுக்கு எதிரான வழக்கில்,  அமராவதியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு நிர்வாக தலைநகரத்தை மாற்றுவதில் தற்போதைய நிலையே நீடிக்கும் என உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இந்த நிலையில் அமராவதியில் நிறுத்தி வைக்கப்பட்ட 8 வழிச்சாலை, சட்டமன்றம், நீதிமன்றம், அரசு குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானப் பணிகளையும் முடித்து பெருநகரமாக மாற்ற முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments