இந்தியாவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சுதந்திர தின வாழ்த்து

0 1078
சுதந்திர தினத்தையொட்டி இந்தியாவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தையொட்டி இந்தியாவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவும் அமெரிக்காவும் சிறந்த பன்மைத்துவ ஜனநாயகங்கள், உலகளாவிய சக்திகள் மற்றும் நல்ல நண்பர்கள் என்று வர்ணித்துள்ளார்.

இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து இரு நாடுகளும் நெருங்கிய உறவையும் ஜனநாயக மரபுகளையும் பகிர்ந்து கொண்டன என்று குறிப்பிட்டுள்ள மைக் பாம்பியோ, பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, சுற்றுச்சூழல், சுகாதாரம், விவசாயம், அறிவியல், தொழில்நுட்பம், கல்வி, விண்வெளி உள்ளிட்டவற்றில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்படும் என்று கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments