சொத்து தகராறில் தனது மகனையே சுத்தியலால் கொடூரமாக அடித்துக் கொன்ற தந்தை

0 5077

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சொத்து தகராறில் தனது மகனை சுத்தியலால் கொடூரமாக தந்தையே அடித்துக் கொன்ற அதிர வைக்கும் சிசிடிவி வெளியாகியுள்ளது.

கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வீர ராஜு என்பவருக்கும், கடற்படையில் பணியாற்றி வந்த அவரது மகன் ஜல ராஜூவுக்கும் சொத்து தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த வீரராஜு, வீட்டின் வராண்டாவில் அமர்ந்து இருந்த மகனை, பின்புறத்தில் இருந்து சுத்தியலால் கொடூரமாக தாக்கினார். முதல் அடியிலேயே அவர் நிலைகுலைந்த போதும் தொடர்ந்து பல முறை அடித்துள்ளார். அந்த காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே மகன் ஜலராஜு உயிரிழந்ததை தொடர்ந்து, வீரராஜு போலீசில் சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments