கோழிக்கோடு விமான விபத்தில் காயமடைந்த 92 பேரும் குணமடைந்தனர் - ஏர் இந்தியா

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்தில் காயமடைந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர். கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கி இரண்டாக உடைந்து.
இந்த விபத்திதில், 2 விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த பயணிகள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். ஏற்கனவே 85 பேர் குணமடைந்த நிலையில், எஞ்சிய 7 பேரும் இன்று நலமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, விமான பாதுகாப்பு தொடர்பாக விவாதிக்க, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை சந்திப்பதற்கு, ஏர் இந்தியாவின் 2 விமானிகள் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Comments