''வாழு வாழ விடு என்பவர்களே பாகிஸ்தானியர்கள்!''-கிரிக்கெட் வாரிய விவகாரத்தில் இம்ரான் மீது மியாந்தத் பாய்ச்சல்

0 4227

தன்னை கடவுள் போல நினைத்துக் கொண்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு தலைவராக வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தவர்களை இம்ரான்கான் நியமித்துள்ளதாக மியாந்தத் குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த வாசிம்கான் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் நியமனத்துக்கு இம்ரான்கான்தான் காரணம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மியாந்தத் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து மியாந்தத் கூறுகையில்,'' பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய பொறுப்புகளில் வெளிநாட்டவர்களை இம்ரான்கான் நியமித்து வருகிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருக்கு கிரிக்கெட் பற்றி ஏபிசி கூட தெரியாது. அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்கிலாந்தில். நாட்டின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு விஷயத்தையும் நான் அனுமதிக்க மாட்டேன். இது குறித்து நான் இம்ரான் கானிடத்தில் வாய்ப்பு கிடைக்கும் போது பேசுவேன். 

இவரை, போன்றவர்கள் ஊழல் செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடத்தான் போகிறார்கள். இந்த நாட்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு தலைவராக நியமிக்க தகுதியானவர்களே கிடைக்கவில்லையா? . நான் உங்களுக்கு கேப்டனாக இருந்துள்ளேன். நீங்கள் எனக்கு கேப்டன் இல்லை. ஆனால், இப்போது நீங்கள் கடவுள் போல நடந்துக் கொள்கிறீர்கள். இந்த நாட்டை பற்றி நீங்கள் யோசித்து பார்க்கவில்லை. வாழு வாழ விடு என்பவர்களே பாகிஸ்தானியர்கள். இம்ரான்கான் மட்டுமே தன்னை அறிவாளியாக நினைத்துக் கொள்கிறார். நாட்டு மக்களின் மனநிலையையே நான் பிரதிபலிக்கிறேன''  என்று தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments