இந்தி தெரிந்தால் தான் இந்தியரா? : திமுக எம்பி கனிமொழி கேள்வி

0 6097
இந்தி தெரிந்தால் தான் இந்தியரா? என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எழுப்பியிருந்த இந்தி புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என சி.ஐ.எஸ்.எஃப் தெரிவித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இந்தி தெரியாது எனக் கூறியதற்காக, “ நீங்கள் இந்தியரா” என பெண் சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி ஒருவர் தம்மைப் பார்த்து கேள்வி எழுப்பியதாக கனிமொழி டிவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்ற நிலை எப்போதிலிருந்து உருவானது என்பதை அறிய விரும்புவதாகவும் அவர் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள சி.ஐ.எஸ்.எஃப், சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் எந்த ஒரு மொழியையும் வலியுறுத்துவது சிஐஎஸ்எஃப்பின் நோக்கம் அல்ல என்றும் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments