”30 ஆயிரம் கடனுக்கு ரூ.13 லட்சம் வட்டி” மேலும் ரூ.4 லட்சம் கேட்டு மிரட்டும் கந்து வட்டி கும்பல்

0 16320

30 ஆயிரம் ரூபாய் கடனுக்கு 13 லட்சம் ரூபாய் வட்டி, கட்டிய போதிலும், மேலும் 4 லட்சம் ரூபாய் கேட்டு கந்து வட்டி கும்பல் மிரட்டியதாக கூறப்படும் புகாரில், பெண் ஒருவர் கிருமி நாசினியை குடித்து, தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்த சம்பவம் சென்னை - ஏழு கிணறு பகுதியில் நிகழ்ந்துள்ளது. மாநகராட்சியில் வரி வசூலிப்பாளராக பணியாற்றி வரும் கிருஷ்ணன் என்பவர், பாதிக்கப்பட்ட தனது மனைவி தேவிகா, தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வேதனை தெரிவித்தார்.

2017-ல் தேவிகா என்பவர், தாரா மற்றும் சுரேஷ் என்ற கந்துவட்டி விடும் தம்பதியினரிடம் 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி யதாக கூறப்படுகிறது.

வார வட்டி, கந்துவட்டி, மீட்டர் வட்டி, வட்டிக்கு வட்டி என பலவிதமான வட்டிகள், குட்டிபோட்டு கடன் தொகை 17 லட்சம் ரூபாயாக உயர்ந்து விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஏழுகிணறு காவல் நிலையத்தில் புகார்
கொடுக்கப்பட்டு உள்ளது. கந்து வட்டி வசூலிக்க தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ள சூழலில் சென்னையில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments