2021ம் ஆண்டுக்கான டீ20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் - ஐசிசி

0 1863
திட்டமிட்டபடி 2021ம் ஆண்டிற்கான டீ20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறும் என, சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது. கொரோனா தொடர்பாக ஒத்திவைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தொடர்கள் குறித்து ஐசிசியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில், நடப்பாண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டீ20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்ற அணிகள், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒத்திவைக்கப்பட்டுள்ள நடப்பாண்டிற்கான உலகக்கோப்பை தொடர், 2022ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், அடுத்த ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற இருந்த மகளிருக்கான ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments