கொரோனா பாதிப்பு: மத்திய அரசு மீது ராகுல் காந்தி மீண்டும் விமர்சனம்

0 1038

நாட்டில் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தூங்கிக் கொண்டிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ஆகஸ்ட் 10க்குள் நாட்டில் 20 லட்சத்தை கொரோனா பாதிப்பு விஞ்சும் என அவர் கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி வெளியிட்ட ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். அதில் நாட்டில் கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இதை ட்விட்டர் பக்கத்தில் ராகுல் இன்று ரீட்விட் (re tweet) செய்து மீண்டும் பதிவிட்டுள்ளார். அதில் அவர், தாம் ஏற்கெனவே தெரிவித்தது போல தற்போது பாதிப்பு 20 லட்சத்தை தாண்டி விட்டதாகவும், ஆனால் மோடி அரசை காணவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments