தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. இன்றும் சவரனுக்கு ரூ.216 உயர்வு..!

0 1701
தங்கம் விலை இன்று சவரனுக்கு மேலும் 216 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 42 ஆயிரத்து 808 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை இன்று சவரனுக்கு மேலும் 216 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 42 ஆயிரத்து 808 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. 

தங்கம் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து, பல்வேறு புதிய உச்சங்களை எட்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒரு சவரன் ஆபரணத்தங்கம் முன்னெப்போதும் இல்லாதபடி 42 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் இன்று 27 ரூபாய் உயர்ந்து 5,351 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் ஒரு சவரன் 216 ரூபாய் அதிகரித்து 42 ஆயிரத்து 808 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் பார் வெள்ளி ஒரு கிலோ இன்று 100 ரூபாய் உயர்ந்து 79 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments