சசிகலா விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட டி.ஐ.ஜி ரூபா... கர்நாடக உள்துறை செயலாளராக நியமனம்

0 165967

கடந்த 2017 -ல் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இரு ஆண்டுகளுக்கு முன், சிறையில் சசிகலா முக்கிய பிரமுகர்களுக்காக சலுகைகளை பெற்று வருவதாக புகார் எழுந்தது. அப்போது, கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜியாக இருந்த ரூபா , சசிகலாவுக்கு விதிகளை மீறி சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தார்.

சசிகலா விரும்பிய நேரத்தில் வெளியே சென்றுவருவதற்கும், விரும்பிய உணவுகளை சமைத்து சாப்பிடுவதற்கு தனி சமையல் அறை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக  ரூபா குற்றம் சாட்டினார். இதற்காக, அப்போதைய கர்நாடக  சிறைத்துறை டி.ஜி.பி சத்யநாராயண ராவ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் ரூபா புகார் கூறினார். அந்த சமயத்தில் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட , தமிழகத்திலும் டி.ஐ.ஜி ரூபா பிரபலமானார்.

பிறகு,  சிறைத்துறையில் இருந்து மாற்றப்பட்டு ரயில்வேதுறையின் ஐ.ஜி.,யாக பெங்களூருவில் பணியாற்றி வந்தார்.இந்நிலையில் , கர்நாடக மாநில அரசின் உள்துறை செயலாளராக ரூபா நியமிக்கப்பட்டுள்ளார்.  இது குறித்து ரூபா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்த பதவியில் அமர்த்தப்பட்ட முதல் பெண் நான் என்று தெரிவித்துள்ளார். டி.ஐ.ஜி ரூபா 2000- ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரி  ஆவார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments