காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை - பெண்ணின் தந்தை உட்பட 6 பேர் கைது..!

0 13311
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரை அடித்துக் கொலை செய்ததாக பெண்ணின் தந்தை உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரை அடித்துக் கொலை செய்ததாக பெண்ணின் தந்தை உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

பஞ்சப்பள்ளி ஓட்டர்திண்ணை பகுதியைச் சேர்ந்த விஜி என்ற இளைஞர், ராஜேஸ்வரி என்பவரை 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார். முறைப்படி திருமணம் செய்து வைப்பதாக கூறிய ராஜேஸ்வரியின் தந்தை முனிராஜ் என்பவர், பெங்களூருவில் காய்கறி வியாபாரம் செய்து வந்த விஜியை ஊருக்கு அழைத்துள்ளார்.

அதன் பின்னர் கும்மனூர் சாலையில் விஜியின் உடல் காயங்களுடன் மீட்கப்பட்டது. விசாரணை நடத்தி வந்த போலீசார், முனிராஜ், அவரது உறவினர்கள் சித்துராஜ், மகாலிங்கம் உட்பட 6 பேரை கைது செய்துள்ளனர்.

விஜியை பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து இருசக்கர வாகனத்தோடு வாகனம் மூலம் கொண்டுச் சென்று கும்மனூர் சாலையில் உடலை வீசியது தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments