தமிழ்நாடு ஆளுநருக்கு கொரோனா உறுதி

0 3459
தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, அறிகுறியற்ற கொரோனா தொற்று உறுதி

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அறிகுறி இல்லாத கொரோனா உறுதியாகியுள்ளது.

கிண்டி ஆளுநர் மாளிகை வளாக காவலர்கள் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்டோருக்கு முதலில் கொரோனா உறுதியானது. இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் ஆளுநரின் உதவியாளர் உள்ளிட்ட 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மேலும் ஒரு உதவியாளரும் கொரோனா உறுதியாகி, கிண்டி கிங் இன்ஸ்டிடியுட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே, 29ம் தேதி முதல் சுயதனிமையிலிருந்த ஆளுநர் காலை 11 மணிக்கு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகை திரும்பினார்.

இந்நிலையில் காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், மருத்துவ ரீதியில் சீராக இருக்கிறார் எனவும், பாதிப்பு லேசானது ((mild)) என்பதால் ஆளுநர் மாளிகையில் தனிமையில் இருக்க ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளதாகவும், அவரை காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் குழு கண்காணிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments